உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சகதியாக மாறிய சாலை முல்லைநகரில் அவலம்

சகதியாக மாறிய சாலை முல்லைநகரில் அவலம்

பெருமாள்பட்டு:திருவள்ளூர் அடுத்துள்ளது பெருமாள்பட்டு ஊராட்சி. இங்குள்ள முல்லை நகரில், 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலைகள் கற்கள் பெயர்ந்து, மோசமான நிலையில் உள்ளன. இதனால், பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருவதோடு, மழை நேரங்களில் சகதியாக மாறுவதால் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியரும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெருமாள்பட்டு முல்லை நகர் பகுதிகளில் ஆய்வு செய்து, சேதமடைந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ