உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம்

நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம்

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், குடியிருப்பு, வணிக வளாகங்களுக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிம கட்டணம் ஆகியவை நகராட்சிநிர்வாகம் வசூலிக்கிறது. இதற்காக, நகராட்சி அலுவலகத்தில், காலை 9:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை, கணினி வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.மேலும், tnurbanpay.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக மேற்கண்ட வரிகளை செலுத்தி, அபராதம், வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கலாம் என, நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியம் அறிவுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி