உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாயமான வாலிபர் சடலமாக மீட்பு

மாயமான வாலிபர் சடலமாக மீட்பு

கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சி வைசாலி நகரைச் சேர்ந்தவர் தினேஷ், 27. இவருக்கு சூர்யா, 26 என்ற மனைவியும் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர் கடந்த 16ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து சூர்யா கொடுத்த புகாரின்படி கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கடம்பத்துார் அடுத்த பானம்பாக்கம் பகுதியில் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஒருவர் துாக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக பகுதிவாசிகள் கடம்பத்துார் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.இதையடுத்து கடம்பத்துார் போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி நடத்திய விசாரணையில் அவர் மாயமான தினேஷ் என தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி