உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேசிய வில்வித்தை போட்டி கும்மிடி மாணவியர் தேர்வு

தேசிய வில்வித்தை போட்டி கும்மிடி மாணவியர் தேர்வு

கும்மிடிப்பூண்டி:இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த தென்மாநில வில் வித்தை போட்டியில் சாதித்த கும்மிடிப்பூண்டி மாணவியர், தேசிய வில்வித்தை போட்டிக்கு தேர்வாகினர். எஸ்.ஜி.எப்.ஐ., எனப்படும் இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு இடையே தென்மாநில அளவிலான வில்வித்தை போட்டி, கடந்த 12 - 15ம் தேதி வரை, கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில், 17 வயதுக்கு உட்பட்ட வில்வித்தை பிரிவில், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி தவுஷிகா தஸ்னீம், 14, வெள்ளி பதக்கம் வென்றார். மற்றொரு ஒன்பதாம் வகுப்பு மாணவியான வர்ஷினி, 14, வெண்கல பதக்கம் வென்றார். மேலும் 'இந்திய வில்' பிரிவு போட்டியில், பெண்கள் அணி பிரிவில், கும்மிடிப்பூண்டி மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவியர் தவுஷிகா தஸ்னீம், 14, ரஞ்சனி, 14, மற்றும் தரங்கினி, 14, ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். இதை தொடர்ந்து, அடுத்த மாதம் 20 - 26ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம், சங்ரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தேசிய வில்வித்தை போட்டிக்கு, மேற்கண்ட கும்மிடிப்பூண்டி மாணவியர் தேர்வாகி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை