தேசிய மத நல்லிணக்க கொடி நாள் நிதி வசூல்
திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மத நல்லிணக்க பிரச்சார வாரம் 19 - 25ம் தேதி வரை நடக்கிறது. தேசிய மத நல்லிணக்க கொடி நாள் தினம் வரும் 25ல் கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களிடையே தேசிய ஒருமைப்பாடு,மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அனாதை குழந்தைகள், சமூகத்தில்கைவிடப்பட்ட குழந்தை களின் கல்வி மற்றும்மறுவாழ்விற்கு உதவும் வகையில் தேசிய மத நல்லிணக்க கொடி நாள் நிதி வழங்கலாம். இதற்கு 100 சதவீதம் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.