பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா இன்று துவக்கம்
ஊத்துக்கோட்டை:சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், நவராத்திரி உத்சவம் இன்று துவங்குகிறது. ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி கிராமத்தில், சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் புரட்டாசி மாதம் நடைபெறும், 10 நாட்கள் சாரதா நவராத்திரி உத்சவம் பிரசித்தி பெற்றது. இந்தாண்டு நவராத்திரி விழா இன்று துவங்கி, வரும் 1ம் தேதி வரை நடக்க உள்ளது. தினமும் மாலை 4:30 மணிக்கு, அன்னை மரகதாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் உற்சவ மூர்த்திக்கு மலர் அலங்காரத்தில், ஊஞ்சல் சேவை நடைபெறும். விழாவின் இறுதி நாளான, வரும் 1ம் தேதி காலை 10:00 மணிக்கு, மரகதாம்பிகை அம்மனுக்கு சாந்தி அபிஷேகம் நடைபெறும். திருத்தணி திருத்தணி பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி விழா, இன்று காலை 8:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, துர்கா ஹோமம், நவகிரக ஹோமம், துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. வரும் 26ம் தேதி மாலை 6:00 மணிக்கு விளக்கு பூஜையும், 28ம் தேதி சந்தன காப்பு அலங்காரமும் நடக்கிறது. வரும் 2ம் தேதி காலை கலச அபிஷேகமும், இரவு துர்காதேவி, சரஸ்வதி அம்மன் ஊஞ்சல் சேவையும், 3ம் தேதி காலை மஞ்சள்நீர் அபிஷேகமும், மாலை துர்க்கையம்மன் வசந்தோற்சவம் விழாவுடன் நவராத்திரி விழா நிறைவுபெறுகிறது. நவராத்திரியை ஒட்டி 10 நாட்களும், கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைத்து, சிறப்பு பூஜை நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்து வருகின்றனர். தேதி அலங்காரம் 22 ராஜராஜேஸ்வரி 23 காமாட்சி 24 மீனாட்சி 25 அன்னபூரணி 26 மகாலட்சுமி 27 துர்காதேவி 28 சிவலிங்கம் 29 பள்ளிகொண்டீஸ்வரர் 30 ஞானசரஸ்வதி 1 மகிஷாசூரமர்த்தினி