உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிலம் அளவீடு செய்வதில் அலட்சியம் பெட்ரோல் கேனுடன் வந்தவரால் பரபரப்பு

நிலம் அளவீடு செய்வதில் அலட்சியம் பெட்ரோல் கேனுடன் வந்தவரால் பரபரப்பு

திருத்தணி, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஜோதிநகரை சேர்ந்தவர் லியோகுமார், 33. இவர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா நாபளூர் கிராமத்தில், கடந்த, 2023ம் ஆண்டு 0.08 சென்ட் நிலம் வாங்கி தனது பெயரில் பத்திர பதிவு செய்து பட்டா வாங்கியுள்ளார்.சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் லியோகுமார், 2025 மே வரை நிலத்தை அளந்து கொடுக்குமாறு, ஏழு முறை ஆன்-லைன் மூலம் கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்தார். ஆனால், நில அளவையாளர்கள் அளந்து கொடுக்காமல், அலட்சியம் காட்டி வந்தனர்.தாசில்தாரும், நிலத்தை அளந்து கொடுக்குமாறு நில அளவையாளர்களுக்கு அறிவுறுத்தியும், நிலத்தை அளக்காமல் நில அளவையாளர்கள் காலம் தாழ்த்தினர். இதனால் மனமுடைந்த லியோகுமார் நேற்று காலை திருத்தணி தாசில்தார் அலுவலகத்திற்கு வாட்டர் கேனில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு வந்தார். கடந்த இரு ஆண்டுகளாக நிலத்தை அளந்து கொடுக்குமாறு பலமுறை விண்ணப்பித்தும், தாசில்தார், நில அளவையாளர்களிடம் அணுகி அளந்து கொடுக்கும் படி கேட்டும் கண்டும், காணாமல் உள்ளதால், பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்ள போகிறேன் என, கூறியதும், அங்கிருந்த வருவாய் துறை அலுவலர்கள், அவரை அழைத்து சமரசம் செய்தனர். இருநாட்களுக்குள் நில அளவை செய்து தருவதாக வருவாய் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை