உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிழற்குடை இல்லாத நேமம் பஸ் நிறுத்தம்

நிழற்குடை இல்லாத நேமம் பஸ் நிறுத்தம்

நேமம்,: திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது, நேமம் கிராமம். இங்கிருந்து, சென்னை மற்றும் திருவள்ளூருக்கு பணி நிமித்தமாக பகுதிவாசிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ --- மாணவியர் என, தினமும், 500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை இல்லாததால், பகுதிவாசிகள் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், இப்பகுதியில் ஓலைக் கீற்றுக்களால் அமைக்கப்பட்டட நிழற்குடையும், சில தினங்களாக பெய்த கனமழையில் சேதமடைந்தது.இதனால் பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, நேமம் பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி