உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  அரசு பள்ளிகளுக்கு புது கட்டடம்: கும்மிடி எம்.எல்.ஏ., நம்பிக்கை

 அரசு பள்ளிகளுக்கு புது கட்டடம்: கும்மிடி எம்.எல்.ஏ., நம்பிக்கை

ஊத்துக்கோட்டை: ''ஊத்துக்கோட்டை, பாலவாக்கத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு, வரும் கல்வியாண்டில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கப்படும்,'' என, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் உறுதியளித்தார். ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறையால், மாணவர்கள் மைதானத்தில் அமர்ந்து பாடம் படிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதில், கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் பங்கேற்று, பெண்கள் பள்ளிக்கு - 203, ஆண்கள் பள்ளிக்கு - 171 என, மொத்தம் 374 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். அப்போது, “ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் பள்ளி, பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறை உள்ளதாக புகார் வந்தது. வரும் கல்வியாண்டில், இரண்டு பள்ளிகளுக்கும் போதுமான வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி