மெதுார் ஊராட்சிக்கு ரூ.30 லட்சத்தில் புதிய அலுவலகம்
பொன்னேரி: மெதுார் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு, 30 லட்சம் ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்டுவதற்கான பணி நடந்து வருகிறது. மீஞ்சூர் ஒன்றியம், மெதுார் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கட்டடம் அதன் உறுதிதன்மையை இழந்த நிலையில், பயன் பாட்டிற்கு லாயக்கற்றதாக மாறி, இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து செல்லும் மக்களின் பாதுகாப்பு கருதி, மேற்கண்ட கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் அமைக்க, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம், 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. இதையடுத்து, புதிய அலுவலக கட்டுமான பணி நடந்து வருகிறது. கூட்டரங்கம், அலுவலகம், துாய்மை பணிகளுக்கான அத்தியாவசிய பொருட்கள் வைக்கும் கிடங்கு என, 1,100 சதுர அடியில், அலுவலக கட்டடம் அமைகிறது. அடுத்த மாதத்திற்குள் பணியை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, அதிகாரிகள் கூறினர்.