மேலும் செய்திகள்
மெத்ஆம்பெட்டமைன் பறிமுதல்; இருவர் கைது
15-Oct-2025
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே போலீசார் 35 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருளை கடத்திய நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர் திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக எஸ்.பி.,க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வெங்கத்துார் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் மணவளநகர் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த ராயல் என்பீல்ட் புல்லட் இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி நடத்திய விசாரணையில் அந்த நபர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மைக்கேல் நம்பி, 42, என தெரிய வந்தது. அவரிடமிருந்து 35 கிராம் மெத் ஆம்பெட்டமை ன் போதைப் பவுடரை போலீசார் கைப்பற்றினர். இதன் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய். விசாரணையில் அவர், திருப்பூர் பகுதியில் தங்கி நைஜீரியா நாட்டிற்கு துணி ஏற்றுமதி செய்து வருவது மற்றும் போதை பவுடரை விற்பனை செய்து வந்துள்ளார் என தெரிந்தது . போலீசார் மைக்கேல் நம்பியை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
15-Oct-2025