மேலும் செய்திகள்
'ஜொள்ளுங்க... மேடம்!'
18-Mar-2025
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல்துறை மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இணைந்து, விபத்துகளை குறைக்கும் முயற்சியாக, வரும் 1-ம் தேதி முதல் பெட்ரோல் 'பங்க்'களில் ஹெல்மெட் அணியாமல் சென்றால், பெட்ரோல் வழங்குவதில்லை என்ற திட்டத்தை நடைமுறைபடுத்த உள்ளனர்.திருவள்ளூரில் விபத்துகளை குறைக்கும் வகையில், 'ஹெல்மெட்' அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என, மாவட்ட எஸ்.பி., தெரிவித்துள்ளார். இதுகுறித்து எஸ்.பி., சீனிவாச பெருமாள் கூறியதாவது:பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் கலந்தாலோசித்து, விபத்துகளை குறைக்கும் முயற்சியாக, ஏப்., 1-ம் தேதி முதல் 'பங்க்'களில் ஹெல்மெட் அணியாமல் சென்றால், பெட்ரோல் வழங்குவதில்லை என்ற திட்டத்தை நடைமுறைபடுத்த உள்ளோம்.முதற்கட்டமாக, திருவள்ளூர் நகர் பகுதிகளில் உள்ள அனைத்து பெட்ரோல் 'பங்க்'களிலும், ' நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்' என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கரை, காவல் துறையினர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.இதில், 'பங்க்'களுக்கு பெட்ரோல் நிரப்ப வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம், வரும் 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணிந்து வந்தால் தான் பெட்ரோல் வழங்குவோம் என, ஊழியர்கள் வாயிலாக அறிவுறுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
18-Mar-2025