உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கனகம்மாசத்திரம் சுற்றுவட்டாரத்தில் நடவு பணியில் வடமாநிலத்தவர்கள்

கனகம்மாசத்திரம் சுற்றுவட்டாரத்தில் நடவு பணியில் வடமாநிலத்தவர்கள்

திருவாலங்காடு,:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளிலும், விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. கூளூர், கனகம்மாசத்திரம், காஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது.இங்கு நாற்று நடவு பணிகளை மேற்கொள்ள ஆள் கிடைக்காத நிலை இருந்து வந்தது. பெரும்பாலானோர், 100 நாள் பணிக்கு சென்று விடுவதால், சொர்ணவாரி பருவத்தில் நாற்று நடவு பணி மேற்கொள்ள ஆட்களின்றி விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர்.மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, தலா 20, பெண் 10 ஆண்கள் என, மொத்தம் 30 பேர் ஏஜன்ட் வாயிலாக கூளூர் கிராமத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள், நேற்று முன்தினம் நாற்று நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:ஒரு ஏக்கரில் நாற்று நடவு செய்தால், 4,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் ஏக்கருக்கு, 5 கிலோ அரிசி, 1 கிலோ காய்கறி கொடுக்கிறோம். தங்க இடவசதி செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 6:00 மணிக்கே நடவு செய்ய வந்து விடுகின்றனர்.இங்குள்ள விவசாய கூலி தொழிலாளர்கள், 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்று விடுவதால், நாற்று நடவு செய்ய வர மறுக்கின்றனர். ஒரு சிலர் வந்தாலும் சரியாக வேலை செய்யாமல், ஏக்கருக்கு, 10,000 ரூபாய் கூலி கேட்கின்றனர்.தற்போது, ராஜஸ்தான், மேற்கு வங்கம், பீஹார், மஹாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த 2,000 பேர், மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று, குறைந்த சம்பளத்தில் விவசாய பணிகளை மேற்கொள்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ