உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுற்றித்திரியும் நாய்களால் தொல்லை

சுற்றித்திரியும் நாய்களால் தொல்லை

திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 230க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக, அரக்கோணம் சாலை, ம.பொ.சி., சாலை, காந்தி ரோடு பிரதான சாலை, பெரிய தெரு, மேட்டுத் தெரு ஆகிய இடங்களில் அதிகளவில் நாய்கள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.எனவே, சாலையில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.- க.விநாயகம்,திருத்தணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !