உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மழைநீர் வடிகால்வாய் சேதம் சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம்

மழைநீர் வடிகால்வாய் சேதம் சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், அகூர் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கிராமத்தில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை.குறிப்பாக, அகூர் கிராமம், வடக்கு தெரு, தெக்கலூர் செல்லும், பிரதான சாலையில் உள்ள மழைநீர் வடிகால்வாய் பராமரிப்பு இல்லாததால், கால்வாய் ஆங்காங்கே பழுது அடைந்தும், உடைந்தும் உள்ளது.இதனால் மழை பெய்யும் போது கால்வாயில் செல்லாமல், சாலை மற்றும் வீடுகளில் மழைநீர் புகுந்து விடுகிறது.பழுதடைந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் என, பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.எனவே, மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை