கொளத்துார் கல் குவாரியில் அதிகாரிகள் ஆய்வு
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், கொளத்துார் பகுதியில் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல் குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால், ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுவதாக சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் மனுவும் அனுப்பி உள்ளனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி செல்வஇளவரசி தலைமையிலான அதிகாரிகள் கொளத்துார் கல் குவாரியில் நேற்று , ஆய்வு மேற்கொண்டனர்.