உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குளத்தின் சுற்றுச்சுவர் சேதம் 7 ஆண்டாக அதிகாரிகள் கொர்

குளத்தின் சுற்றுச்சுவர் சேதம் 7 ஆண்டாக அதிகாரிகள் கொர்

ஆர்.கே.பேட்டை, பள்ளி வளாகத்தில் உள்ள குளத்தின் சுற்றுச்சுவர், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வீரமங்கலம் கிராமத்தில் கிராம பொது குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையை சுற்றிலும், அரசு தொடக்க பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகள் அமைந்துள்ளன. இந்த குளத்திற்கு, 2015ல் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. சுற்றச்சுவர் கட்டும் வரை குளம் சுத்தமாக காணப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் எழுப்பியதும், குளத்தின் நீர்வரத்து தடைபட்டது. மேலும், பகுதிமக்கள் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனால், குளம் சீரழிந்து வருகிறது. குளத்தின் சுற்றுச்சுவரும், ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து இடிந்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, உறுதித்தன்மை இல்லாத சுற்றுச்சுவரை முழுதுமாக இடித்துவிட்டு, இரும்பு கிரில் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !