உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் நகராட்சியில் அதிரடி கொசு புழு ஒழிக்க ஆயில் பால்

திருவள்ளூர் நகராட்சியில் அதிரடி கொசு புழு ஒழிக்க ஆயில் பால்

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், கடந்த வாரம் பெய்த பலத்த மழையால், ராஜாஜிபுரம், ஜெயா நகர், புங்கத்துார் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. தேங்கிய தண்ணீரில் கொசு உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதையடுத்து, தேங்கிய தண்ணீரில் உற்பத்தியாகும் கொசு புழுக்களை ஒழிக்க நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில், துப்புரவு பணியாளர்கள், நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து, சுகாதார அலுவலர் மோகன் கூறியதாவது:நகர பகுதியில் தேங்கிய தண்ணீரில், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசு புழுக்கள் உற்பத்தியாகும். அவற்றை அழிக்க, 'வேஸ்ட் ஆயிலில்', மர சக்கையை ஊற வைத்து, பின் பந்து போல் உருட்டி, ஒரு துணியில் கட்டி, தேங்கிய தண்ணீரில் வீசப்படும். இதன் வாயிலாக எண்ணெய் படலம் தண்ணீரில் பரவுவதால், கொசு புழுக்களின் சுவாசம் தடைபட்டு, அவைகள் இறந்து விடும். முதல் கட்டமாக, 100 பந்து தயாரித்துள்ளோம். நேற்று நகரின் பல்வேறு பகுதிகளில், 50 'ஆயில்பால்' தெளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, தண்ணீர் தேங்கிய இடங்களில், இந்த எண்ணெய் பந்து வீசி, கொசு புழு அழிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை