உள்ளூர் செய்திகள்

மூதாட்டி மாயம்

கடம்பத்துார்: கடம்பத்துாரில், 76 வயது மூதாட்டி மாயமானது குறித்து, அவரது மகள் கொடுத்த புகாரின்படி போலீசார் விசாரித்து வருகின்றனர். கடம்பத்துார் ஊராட்சி, கசவநல்லாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 37. இவருக்கு, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர், மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், தாய் குப்பம்மாள், 76, உடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 30ம் தேதி மதியம், வீட்டை விட்டு வெளியே சென்ற குப்பம்மாள், அதன்பின் வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, நேற்று முன்தினம் ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை