மேலும் செய்திகள்
பைக் மீது லாரி மோதல் ஒருவர் பலி; ஒருவர் காயம்
10-Jun-2025
பூந்தமல்லி,:பூந்தமல்லி, வசந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன், 59. அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், 42. இருவரும், பூந்தமல்லியில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.நேற்று முன்தினம் இரவு, இருவரும் 'ஹோண்டா ஷைன்' பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை பிரபாகரன் ஓட்டி சென்றார்.சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியை கடந்தபோது, பின்னால் வேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சுந்தரேசன், சம்பவ இடத்திலேயே பலியானார். பிரபாகரன் காயங்களுடன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.விபத்து குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
நெசப்பாக்கம் என்.சி., போஸ் தெருவைச் சேர்ந்தவர் சுவாதி, 20. இவர் நேற்று காலை தன் ஸ்கூட்டியில், அவரது அக்கா மகன் சந்தோஷ், 12, மற்றும் மகள் ஜனனி, 10, ஆகியோரை, கே.கே., நகர் 9வது செக்டாரில் உள்ள தனியார் பள்ளியில் விட சென்றார்.நெசப்பாக்கம் ஏரிக்கரை சாலையில் இருந்து, அண்ணா பிரதான சாலையில் திரும்பும்போது, பின்னால் வந்த மினி லாரி, ஸ்கூட்டியில் மோதியதில், மூவரும் கீழே விழுந்தனர்.இதில், ஜனனிக்கு வலது காலில் லேசான காயம் ஏற்பட்டது. கே.கே., நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து ஏற்படுத்திய மினி லாரி ஓட்டுநர், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மன்னிப்பு கோரியதையடுத்து, அவரது பெற்றோர் புகார் அளிக்க விருப்பமில்லை எனக் கூறி சென்றனர்.
10-Jun-2025