மேலும் செய்திகள்
டூ - வீலரில் சென்றவர் லாரியில் சிக்கி பலி
22-Dec-2024
கும்மிடிப்பூண்டி:மாதர்பாக்கம் அருகே, சிறுவாடா கிராமத்தில் வசித்தவர் முனிசேகர், 46. விவசாயி. நேற்று முன்தினம் மனைவி ரேவதியுடன், ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில், பொன்னேரி சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலையில், தாணிப்பூண்டி கிராமம் அருகே கட்டுப்பாடு இழந்து சாலையோர மரத்தில், அவர் மோதினார். சம்பவ இடத்திலேயே முனிசேகர் உயிரிழந்தார். காயம் அடைந்த ரேவதி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விபத்து குறித்து, பாதிரிவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Dec-2024