மேலும் செய்திகள்
லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி
09-Feb-2025
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், லட்சுமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 56; இவர், கடந்த டிசம்பர் மாதம், 22ம் தேதி, 'ஸ்பிளன்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில், திருத்தணி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, அருங்குளம் கூட்டுச்சாலை அருகே சென்ற போது, நிலைதடுமாறி வாகனத்துடன் சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார்.சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த மாதம் 24ம் தேதி, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு, ஏழுமலை, உயிரிழந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
09-Feb-2025