உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஜனப்பன்சத்திரம் நெடுஞ்சாலையில் கவிழ்ந்த வெங்காய லாரி

ஜனப்பன்சத்திரம் நெடுஞ்சாலையில் கவிழ்ந்த வெங்காய லாரி

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில், சாலை தடுப்பு இருக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகை இல்லாததால், வேகமாக வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஜனப்பன்சத்திரம் பகுதியில் இருந்து இடதுபுறம் செல்லும் சாலையில், 36 கி.மீ., தமிழக பகுதி உள்ளது. இதில் மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை மற்றும் இணைப்பு சாலை வழியே, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேற்கண்ட சாலையில் ஜனப்பன்சத்திரம் - சூளைமேனி வரை சாலை தடுப்புகள் போடப்பட்டு உள்ளன. இந்த தடுப்புகள் இருப்பது குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்கவில்லை. இதனால் தடுப்புகள் தெரியாமல் கனரக வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர் கதையாக நிகழ்கிறது. நேற்று காலை மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வெங்காயம் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி, சூளைமேனி கிராமத்தில் தடுப்புகள் இருப்பது தெரியாததால், லாரி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயம் இன்றி தப்பினார். தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலை தடுப்புகள் குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி