உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழில் முனைவோர் புத்தாக்க படிப்பு இணையத்தில் விண்ணப்பம் வரவேற்பு

தொழில் முனைவோர் புத்தாக்க படிப்பு இணையத்தில் விண்ணப்பம் வரவேற்பு

திருவள்ளூர்:'தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் படிப்பிற்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து கடந்த ஆண்டு முதல் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பை நடத்தி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பயின்று வருகின்றனர்.இந்த ஆண்டும் சான்றிதழ் படிப்பு வரும் ஜூலை முதல் துவங்க உள்ளது. தொழில்முனைவோராக ஆர்வமுள்ள இளைஞர்கள் இதற்கான விண்ணப்பத்தை https://www.editn.in/Web-One-Year-Registration என்ற இணையதளம் வாயிலாக, சேர்ந்து படிக்கலாம்.இந்தப் படிப்பிற்கு ஆண்டுக்கு 80,000 ரூபாய் கட்டணம். தகுதியாக, 21- 40 வயது மற்றும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் 10, பிளஸ் 2 படிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கி கடன் வசதியும் செய்து தரப்படும். மேலும், விபரங்களுக்கு www.editn.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அல்லது 74486 84989, 86681 01638 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !