உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் 2,150 பேருக்கு ஆன்லைன் பட்டா வழங்கல்

திருத்தணியில் 2,150 பேருக்கு ஆன்லைன் பட்டா வழங்கல்

திருத்தணி, திருத்தணி வருவாய் கோட்டத்தில் திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு என, மூன்று தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகின்றன. இங்குள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் வாயிலாக இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.இந்நிலையில், வீட்டுமனை பட்டாக்கள் பெற்றவர்களுக்கு ஆன்லைன் பட்டா இல்லாததால், அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, திருத்தணி ஆதிதிராவிட நல தனி தாசில்தாராக பணியாற்றி வரும் மதியழகன், முதற்கட்டமாக மூன்று மாதத்தில், 44 கிராமங்களில் உள்ள 2,150 பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார்.மீதமுள்ள 4,350 பயனாளிகளுக்கும், இரண்டு மாதத்தில் ஆன்லைன் பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி