உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கல்வி உதவித்தொகை இணையத்தில் விண்ணப்பம்

கல்வி உதவித்தொகை இணையத்தில் விண்ணப்பம்

திருவள்ளூர்:பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்கள் மேற்படிப்பிற்காக கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றனர்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ - மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை செயல்படுத்தப்பட்டு வருகிறது.நிபந்தனை அடிப்படையில், கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பத்தினை https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தில், இம்மாதம் 28க்குள் விண்ணப்பிக்கலாம்.நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக கல்வி உதவித்தொகை பெற கல்லுாரியில் உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை