உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வளமான தமிழகத்தை உருவாக்க மாணவர்களால் தான் முடியும் பட்டிமன்ற நடுவர் ராமலிங்கம்

வளமான தமிழகத்தை உருவாக்க மாணவர்களால் தான் முடியும் பட்டிமன்ற நடுவர் ராமலிங்கம்

திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த மேதினாபுரம் பகுதியில், தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியின் ஆண்டு விழா தாளாளர் எஸ்.பாலாஜி தலைமையில் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் வேதநாயகி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.இதில், தளபதி கல்லுாரி தலைவரும், கடலுார் எம்.பி.,யுமான எம்.கே.விஷ்ணுபிரசாத், பட்டிமன்ற நடுவரும், பேச்சாளருமான நகைச்சுவை நாவலர் புலவர் ம.ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று, கல்லுாரி அளவிலும், பல்கலைக் கழகம் அளவிலும் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியருக்கு பரிசு, சான்றுகள் வழங்கி பாராட்டினர்.தொடர்ந்து, பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம் பேசியதாவது:மாணவர்களுக்கு கல்வி தான் ஆதாரம். வளமான தமிழகத்தை உருவாக்க மாணவர்களால் தான் முடியும். கல்வியால் மாணவர்கள் எதையும் சாதிக்கலாம்.மாணவர்கள் கவனச் சிதைவு இல்லாமல் இலக்கை நோக்கி சென்றால், எந்த உயரத்தையும் எளிதாக தொடலாம். மாணவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். பெற்றோரை மதிக்காதவர்கள், வாழ்க்கையில் முன்னுக்கு வரமுடியாது. தற்போது மாணவியர் அனைத்து துறைகளிலும் சாதித்து காட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி