உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரிக்கரை சீரமைக்க உத்தரவு

ஏரிக்கரை சீரமைக்க உத்தரவு

திருவள்ளூர்:திருவள்ளுர் அடுத்த காக்களூர் ஆவின் பால் பண்ணையில் கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார். தயிர், மோர் தயாரிப்பு கூடம், பால் பாக்கெட் தயாரிப்பு கூடம், ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் தரம் மற்றும் உற்பத்தி செய்யப்படுவது குறித்து, அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.பின், காக்களூர் ஏரியை பார்வையிட்ட அவர், ஏரியைச் சுற்றியும் சேதமடைந்த நடைபாதையினை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு, பொதுப்பணித் துறை அலுவலருக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி