உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெளிமாவட்ட நெல் கொள்முதலா? ஊழியர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

வெளிமாவட்ட நெல் கொள்முதலா? ஊழியர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர் நெல் கொள்முதல் நிலையத்தில், வெளிமாவட்ட நெல் விற்பது கண்டறியப்பட்டால், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, திருவள்ளூர் கலெக்டர் எச்சரித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்தில், 68 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்ய வேண்டும். வியாபாரிகளிடம் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் நெல் கொள்முதல் செய்வது கண்டறியப்பட்டால், நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் புகார் குறித்து, மண்டல அலுவலக எண்: -044- - 2766 4016; மொபைல் போன் எண் 89252 79611 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ