உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மண்டல கால்பந்து போட்டி பச்சையப்பா கல்லுாரி சாம்பியன்

மண்டல கால்பந்து போட்டி பச்சையப்பா கல்லுாரி சாம்பியன்

சென்னை: சென்னை பல்கலையில், 'பி' மண்டல கால்பந்து போட்டியில், சென்னை பச்சையப்பா கல்லுாரி கோப்பையை வென்றது. சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளை, 'ஏ, பி' என இரு பிரிவுகளாக பிரித்து, விளையாட்டு போட்டிகள் நடத்தப் பட்டன. 'பி' மண்டல கல்லுாரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி, பட்டாபிராம், இந்து கல்லுாரியில் நடந்தது. போட்டியில், 39 அணிகள் பங்கேற்றன. போட்டிகளில், சென்னை பச்சையப்பா கல்லுாரி, மாதவரம் ஜே.எச்.ஏ., அகர்சன் கல்லுாரி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில், பச்சையப்பா கல்லுாரி அணி துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. முடிவில், 2 -- 0 என்ற கோல் கணக்கில், பச்சையப்பா அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ