உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புன்னப்பாக்கத்தில் பராமரிப்பின்றி நெல் கொள்முதல் நிலையம்

புன்னப்பாக்கத்தில் பராமரிப்பின்றி நெல் கொள்முதல் நிலையம்

திருவள்ளூர்:புன்னப்பாக்கம் நெல்கொள்முதல் நிலையத்தில் பராமரிப்பில்லாததால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், சம்பா அறுவடை துவங்கி உள்ள நிலையில், விவசாயிகளிடம் இருந்து, நெல் கொள்முதல் செய்ய, 67 இடங்களில் நேரடி நிலையம் திறக்கப்பட்டு உள்ளன.திருவள்ளூர் ஒன்றியம், புன்னப்பாக்கம் கிராமத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு தினமும் ஏராளமான விவசாயிகள் முன்பதிவு செய்து, தங்களது நெல் மணிகளை டிராக்டர்களில் கொண்டு வருகின்றனர்.தாங்கள் கொண்டு வந்த நெல் மணிகளை, அங்குள்ள காலியிடத்தில் உலர வைக்கின்றனர். இவ்வாறு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை வைக்கும் இடத்தில் கூரை சேதமடைந்து உள்ளது.அருகில், மதுப்பிரியர்கள் பயன்படுத்திய டம்ளர், பாட்டில்கள் குவிந்துள்ளன. இதனால், விவசாயிகள் கடும் சிரமத்துடன் நெல் மணிகளை உலர வைக்கின்றனர்.எனவே, நெல் கொள்முதல் நிலையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ