உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிறிஸ்துவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு விமரிசை

கிறிஸ்துவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு விமரிசை

கடம்பத்துார்:இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் 40 நாள் தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தவக்காலத்தின் முடிவில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும். தவக்காலத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன் ஒருபகுதியாக நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கடம்பத்துார், மணவாளநகர் உட்பட பல பகுதியில் நேற்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் நடந்த குருத்தோலை ஞாயிறு திருப்பலியில் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் கடம்பத்தூர் புனித மத்தேயு ஆலயத்தின் சார்பாகவும், சி.எஸ்.எஸ்.ஐ., குருசேகரம் கடம்பத்தூர் இணைந்து புனித குரு தோலை ஞாயிறு விழாவை கொண்டாடினார்கள். தவக்காலத்தின் அடுத்த முக்கிய நிகழ்வாக வரும் 18ம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளியும், 20ம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

ஊத்துக்கோட்டையில் குறுத்தோலை ஞாயிறு

ஊத்துக்கோட்டை:குறுத்தோலை ஞாயிறு சிறப்பு ஊர்வலம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், கத்தோலிக்க திருச்சபையின், அடைக்கல அனண ஆலயம் சார்பில், பங்குதந்தை அலெக்ஸ்சகாயராஜ் தலைமையில் நடந்தது.திருவள்ளூர் சாலை, மாதா மரக்கடையில் துவங்கிய ஊர்வலம், பஜார் வழியே, அடைக்கல அன்னை ஆலயத்தை அடைந்தது. இதில், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ