காலை நேரத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க பயணியர் எதிர்பார்ப்பு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில்களின் முனையமாகும். இங்கிருந்து, சென்னை சென்டரலுக்கு தினசரி, 40 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.சிப்காட் தொழிலாளர்கள், மாணவர்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள் என, தினசரி, பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த ரயில்களில் பயணிக்கின்றனர்.பரபரப்பான காலை நேரத்தில், 8:30 மணிக்கு, கும்மிடிப்பூண்டியில் இருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புறநகர் மின்சார ரயில் இயக்கப்படுகிறது. அதன் பின் 9:55 மணிக்கு இயக்கப்படுகிறது.இடைப்பட்ட, ஒன்றரை மணி நேரத்திற்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல, புறநகர் மின்சார ரயில் இல்லாததால், அனைத்து தரப்பு பயணிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.அதனால், அந்த இடைவெளியில் கூடுதலாக இரண்டு புறநகர் மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என, ரயில் பயணியர் எதிர்பார்க்கின்றனர்.