உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஜங்காலிபள்ளியில் நிழற்குடை இல்லாமல் பயணியர் அவதி

ஜங்காலிபள்ளியில் நிழற்குடை இல்லாமல் பயணியர் அவதி

பள்ளிப்பட்டு: கூட்டு சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். பொதட்டூர்பேட்டையில் இருந்து திருத்தணி செல்லும் மார்க்கத்தில் உள்ளது ஜங்காலிபள்ளி கிராமம். இந்த கிராமத்தினர் தங்களின் அத்தியாவசிய பணிகள் காரணமாக பொதட்டூர்பேட்டை மற்றும் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். கிராமத்தை ஒட்டி பிரதான சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்து பயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிறுத்தத்தில் பொதட்டூர்பேட்டை மார்க்கத்தில் நிழற்குடை இல்லாததால், பயணியர் காத்திருக்க இடவசதி இல்லாமல் தவிக்கின்றனர். சாலையோரத்தில் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு, ஜங்காலிபள்ளி கூட்டு சாலையில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ