மேலும் செய்திகள்
பள்ளிப்பட்டு பஸ் நிலையம் மேம்படுத்துவது எப்போது?
21-Apr-2025
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட 33 ஊராட்சிகளைச் சேர்ந்த பகுதிவாசிகள், போதிய பேருந்து வசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளிப்பட்டில் இருந்து நகரி மற்றும் சோளிங்கர் மார்க்கத்தில் அமைந்துள்ள ஊராட்சிகளுக்கு மட்டும் பேருந்து வசதி உள்ளது.இந்த மார்க்கங்களில் இயக்கப்படும் இடைநில்லா பேருந்துகள், அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நிறுத்தப்படுவது இல்லை. ஒற்றை இலக்கத்திலான நகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றனர். அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப நகர பேருந்துகளை அதிகரிக்கவில்லை.இதனால், குக்கிராமங்களில் வசிப்பவர்கள், ஷேர் ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. பள்ளிப்பட்டில் இருந்து அத்திமாஞ்சேரிபேட்டை, பொதட்டூரில் இருந்து அத்திமாஞ்சேரிபேட்டை, நகரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பயணியரை ஏற்றிச் செல்கின்றனர். இதனால், விபத்து நேரிடும் அபாயம் உள்ளது.எனவே, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிகளவில் நகர பேருந்துகள் இயக்கப்பட்டால், பகுதிவாசிகள் ஷேர் ஆட்டோவில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படாது என, பள்ளிப்பட்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.
21-Apr-2025