போக்குவரத்து லாயக்கற்ற பாத்தப்பாளையம் சாலை
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்தப்பாளையம் கிராமத்தில் இருந்து ஈகுவார்பாளையம் மேடு வரையிலான சாலை, மாநில நெடுஞ்சாலையின் பராமரிப்பில் உள்ளது.இந்த சாலையில், தனியார் மின் உற்பத்தி நிலையம் உட்பட ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வரும் கனரக மற்றும் அதிக எடை சரக்கு லாரிகளால், இச்சாலை குண்டும் குழியுமாக மாறியது.ஏராளமான இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதை கடக்கும் கனரக வாகனங்கள் திக்குமுக்காடி போகின்றன. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.எனவே, போக்குவரத்துக்கு லாயக்கற்று படுமோசமான நிலையில் உள்ள சாலையை, மாநில நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.