உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வயலுார், திருமணிக்குப்பத்தில் 137 பேருக்கு பட்டா வழங்கல்

வயலுார், திருமணிக்குப்பத்தில் 137 பேருக்கு பட்டா வழங்கல்

வயலுார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட வயலுார், திருமணிக்குப்பம் ஊராட்சியில், கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில், இலவச வீட்டுமனை பட்டா பெறாதவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.வயலுார் ஊராட்சி அலுவலகம் அருகே நடந்த விழாவிற்கு, திருவள்ளூர் தாசில்தார் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வயலுார் பகுதியைச் சேர்ந்த 120 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். அதேபோல், திருமணிக்குப்பத்தில் நடந்த விழாவில், 17 பேர் என, மொத்தம் 137 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை