உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பி.டி.ஓ., அலுவலகத்தில்  மழைநீர் ஒழுகுவதால் அவதி

பி.டி.ஓ., அலுவலகத்தில்  மழைநீர் ஒழுகுவதால் அவதி

திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில்,வட்டார வளர்ச்சி அலுவலகம், 2016ம் ஆண்டு திருவள்ளூர் நெடுஞ்சாலையில், அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே, 3 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.இங்கு, ஒன்றியத்தில் உள்ள, 42 ஊராட்சிகளில் நடைபெறும் நலத்திட்ட பணிகள், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணி செய்கின்றனர்.இவர்களுக்கு தனித்தனியாக அதே வளாகத்தில் அலுவலகங்கள் உள்ளன. ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் வகையில் கூட்டரங்கம் தனியாக அமைந்துள்ளது.இந்நிலையில், திருவாலங்காடில் சில நாட்களாக பெய்த கனமழையால், வட்டார வளர்ச்சி அலுவலக கட்டடத்தின் சுவர்கள் நனைந்து ஊறி, கூரை வழியாக மழைநீர் ஒழுகி வருகிறது. குறிப்பாக, முதல் தளத்தில் உள்ள கூட்டரங்கில் மழைநீர் ஒழுகி தேங்கியுள்ளது.இது கட்டப்பட்டு எட்டு ஆண்டுகள் மட்டுமே ஆகிய நிலையில், கட்டடத்தின் கூரையில் நீர் ஒழுகுவதால் கட்டடத்தின் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை