மேலும் செய்திகள்
ஓய்வூதியர்கள் தர்ணா
19-Nov-2024
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மருத்துவ கல்லுாரி முன் தமிழக அரசு வருவாய், காவல் துறை மற்றும் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்த போராட்டத்தில் பிடித்தம் செய்யும் காலத்தை 10 ஆண்டுகளாக மாற்ற வேண்டும். 70 வயதில் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் உட்பட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென கோரி கோஷம் எழுப்பி தர்ணா செய்தனர்.
19-Nov-2024