உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சேறாக மாறிய சாலை மக்கள் கடும் அவதி

சேறாக மாறிய சாலை மக்கள் கடும் அவதி

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றிய அலுவலகம் எதிரே வசந்தம் நகர், கக்கன்ஜி நகர் என, ஐந்துக்கும் மேற்பட்ட நகர்களில், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து, மண் சாலையாக மாறியுள்ளது. இதனால், பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால், சாலையில் மழைநீர் தேங்கி சேறாக மாறியுள்ளதால், பகுதிமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க வேண்டுமென, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ