உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடியிருப்பு அருகே கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்

குடியிருப்பு அருகே கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்

திருவாலங்காடு : திருவள்ளூர் ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் திருவாலங்காடு அமைந்துள்ளது. இங்கு, மாநில நெடுஞ்சாலையில் உள்ள சர்க்கரை ஆலை முதல் தேரடி வரை 500க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் அமைந்துள்ளன.இந்த பகுதியில் கழிவுநீர் செல்ல, நெடுஞ்சாலையையொட்டி மண் பாதையில் கால்வாய் வெட்டப்பட்டு உள்ளது. தற்போது, இந்த மண் கால்வாய் பல இடங்களில் துார்ந்துள்ளது. இதனால், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியுள்ளது.தற்போது, தேரடி அருகே இரண்டு இடங்களில் கழிவுநீர் குட்டை போல தேங்கியுள்ளதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக, அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து பகுதிவாசிகள் கூறுகையில், 'குட்டை போல கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இரவில் கொசுக்கள் கடிப்பதால் கை, கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் அடிக்கடி நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கழிவுநீரில் பிளீச்சிங் பவுடர் கூட துவுவதில்லை.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கால்வாயை சீரமைத்து கழிவுநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி