உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்.எல்.ஏ.,விடம் மக்கள் புகார்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்.எல்.ஏ.,விடம் மக்கள் புகார்

ஊத்துக்கோட்டை:'உங்களுடன் ஸ்டாலின்' முகாமிற்கு வந்த எம்.எல்.ஏ.,விடம் மக்கள் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், தாசில்தார் ராஜேஷ் தலைமையில் நேற்று நடந்தது. கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., - டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்றார். அப்போது எம்.எல்.ஏ., விடம் முகாமிற்கு வந்த மக்கள், செஞ்சியகரம் வில்லியர்காலனி, தாராட்சி பழைய காலனி ஆகிய பகுதிகளில் சாலை வசதி, பாலவாக்கத்தில் பஸ் நிறுத்த வசதி இல்லை என கூறினர். மேலும் ஊத்துக்கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல்லை வாங்காமல், வியாபாரிகள் கூறுபவர்களின் நெல்லை மட்டும் வாங்குவதாக புகார் கூறினர். இதைக் கேட்ட எம்.எல்.ஏ., 'இந்த அரசு பொது மக்களின் குறைகளை கேட்காமலேயே தீர்த்து வருகிறது. நீங்கள் சொன்ன ஒவ்வொரு புகாரும் விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கபடும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !