மேலும் செய்திகள்
மீண்டும் பைக் ரேஸ் போலீசார் விசாரணை
29-Mar-2025
திருத்தணி:திருத்தணி நகராட்சி எம்.ஜி.ஆர்.நகரில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் பின்புறம் மற்றும் ரயில் தண்டவாளம் அருகே, சில இளைஞர்கள் கஞ்சா போதையில், அவ்வழியாக செல்வோரிடம் தகராறு செய்து வருகின்றனர்.இதனால், பெண்கள் வெளியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர். நேற்று மாலை எம்.ஜி.ஆர்.நகர் வாசிகள், திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதில், 'போதை இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது. போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
29-Mar-2025