உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அதிகரிக்கும் நாய்கள் தொல்லை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை

அதிகரிக்கும் நாய்கள் தொல்லை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பகுதியில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் புற்றீசல் போல் நாய்களின் பெருக்கம் அதிகரித்து, சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. சாலையின் குறுக்கே நாய்கள் திடீரென வருவதால், அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். இறைச்சி கடைகள் மற்றும் சாலையோர உணவகங்கள் உள்ள பகுதியில், உணவுக்கு சண்டையிடும் நாய்களில் மத்தியில், அச்சத்துடன் மக்கள் கடந்து செல்கின்றனர். மேலும், அதிகாலை நடைபயிற்சி ஈடுபடுவோர் மற்றும் இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி செல்லும் நாய்கள் கடிக்க பாய்கின்றன. இதனால், கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனவே, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் இணைந்து, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட இடங்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து, கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை