சேதமான ஆர்.ஐ., அலுவலகம் சீரமைக்க மக்கள் கோரிக்கை
திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை சீரமைக்க வேண்டுமென பகுதி மக்கள்கோரிக்கை விடுத்து உள்ளனர்.திருமழிசை பேரூராட்சியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை ஆறு வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் பயன்பாடில்லாமல் உள்ளது. அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சேதம் அடைந்துள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடத்தை இடித்து அகற்றி புதிய கட்டடம் அமைத்து கட்ட வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.