உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தெரு விளக்குகள் ஒளிராததால் சீனிவாசபுரத்தில் மக்கள் அவதி

தெரு விளக்குகள் ஒளிராததால் சீனிவாசபுரத்தில் மக்கள் அவதி

திருத்தணி:சீனிவாசபுரத்தில் மூன்று மாதங்களாக தெரு விளக்குகள் ஒளிராததால், அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் ஊராட்சிக்குட்பட்டது சீனிவாசபுரம் கிராமம். இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சீனிவாசபுரம் நுழைவு பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி, அங்கன்வாடி மையம், துணை சுகாதார நிலையம் ஆகியவை இயங்கி வருகிறது. இப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மூன்று மாதங்களாக சீனிவாசபுரம் நுழைவு பகுதியில் தெரு மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால், வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பும் மக்கள் அச்சத்துடன் நடந்து வருகின்றனர். மேலும், விளக்குகள் ஒளிராததால், அப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடக்கும் அபாயம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சீனிவாசபுரத்தில் தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி