உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுமழைக்கே குளமாக மாறிய சாலை ஊத்துக்கோட்டையில் மக்கள் அவதி

சிறுமழைக்கே குளமாக மாறிய சாலை ஊத்துக்கோட்டையில் மக்கள் அவதி

ஊத்துக்கோட்டை:சாலை, கால்வாய் வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் முறையாக மேற்கொள்ளாததால், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில், நான்காவது வார்டு பகுதியில் எம்.ஜி.ஆர்., நகர் இரண்டாவது தெரு உள்ளது. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு முறையான சாலை மற்றும் கால்வாய் வசதி இல்லை. இதனால், சிறுமழை பெய்தாலே தண்ணீர் குளம்போல் தேங்கி விடுகிறது. மேலும், முழுமையாக கால்வாய் வசதி இல்லாததால், தண்ணீர் ஆங்கோங்கே தேங்கி நிற்கிறது. சில நாட்களாக ஊத்துக்கோட்டையில் மாலை நேரங்களில மழை பெய்து வருகிறது. இதனால், மேற்கண்ட தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், சாலையில் தேங்கும் நீரில் கொசுக்கள் உருவாகி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. சாலை மற்றும் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்தும், எவ்வித பலனும் இல்லை. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலை மற்றும் கால்வாய் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி