உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 3 நாளாக குடிநீர் தட்டுப்பாடு அரசு பஸ்சை சிறைபிடித்த மக்கள்

3 நாளாக குடிநீர் தட்டுப்பாடு அரசு பஸ்சை சிறைபிடித்த மக்கள்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே ஓபசமுத்திரம் கிராமம் உள்ளது. கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், நத்தம் கிராமத்தில் இருந்து ஓபசமுத்திரம் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.மூன்று நாட்களாக குடிநீர் வினியோகத்தில் தட்டுப்பாடு நிலவி வருவதாக, கிராமவாசிகள் சார்பில் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். தீர்வு காணப்படாததால், கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், நேற்று அவ்வழியாக சென்ற தடம் எண்: 557சி என்ற மாநகர் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சென்ற ஆரம்பாக்கம் போலீசார், உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். அதன்பின், கிராம பெண்கள் கலைந்து சென்றனர். திடீர் மறியலால், கள்ளூர் - சுண்ணாம்புகுளம் சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை