மேலும் செய்திகள்
பட்டா கேட்டு மனு
06-May-2025
திருத்தணி:திருத்தணி தாலுகா பொன்பாடி கொல்லக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமுலு என்பவர், கலெக்டர் பிரதாப்பை சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:பொன்பாடியில் எனக்கு சொந்தமான, புல எண்: 71/5 ல், அனாதீன நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலத்திற்கு புதிய வழிகாட்டி மதிப்பின்படி பத்திரப்பதிவும் செய்துள்ளேன்.ஆனால், அந்த நிலத்திற்கு பட்டா வழங்கும்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தாசில்தாரிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, என் நிலத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்ற கலெக்டர், 'விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தார்.
06-May-2025