திருவள்ளூர் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலம் சார்பில், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் உயர்கல்வி வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது,பள்ளி தலைமையாசிரியர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் செந்தில்வேலன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் வடிவேலு பங்கேற்று, மாணவர்கள் இடையே சிறப்புரை ஆற்றினார்.அவர் பேசியதாவது:அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவுடன் பள்ளியிலேயே தங்களது பெயர்கள் பதியப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் வரை வேலை கிடைக்கவில்லை எனில், அரசு வாயிலாக உதவித்தொகை வழங்கப்படுகிறது.மேலும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, அரசு வேலை பெற இலவச வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்று, பயன் பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.